மேத்யூ சூறாவளிக்குப்பின் ஹெய்ட்டியில் காலரா தொற்று
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மேத்யூ சூறாவளிக்குப்பின் ஹெய்ட்டியில் காலரா தொற்று

ஹெய்ட்டியில் காலரா தொற்றின் அளவு மோசமடையலாம் என்று ஐநா எச்சரித்துள்ளது.

மேத்யூ சூறாவளி தாக்கியதில் இருந்து குறைந்தது இதுவரை பன்னிரெண்டு பேர் காலராவுக்கு பலியாகியுள்ளனர்.

மேலும் பலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது.

அங்கே அதிகரித்த நெருக்கடி நிலை நிலவுவதாக ஐநா அறிவித்துள்ளது.

ஐநாவின் அமைதிப்படை மேலும் ஆறு மாத காலம் அங்கே தங்கியிருந்து மீட்பு நடவடிக்கைகளில் உதவ வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.