இந்தோனீசியாவில் ஒரு பாலுறவினருக்கு எதிரான பாரபட்சம் என்ற சர்ச்சை

இந்தோனீசிய அரசாங்கம், இளைஞர்களுக்கான புதிய தூதர்கள் பதவிகளுக்கான விளம்பரத்தில், விண்ணப்பதாரர்கள், ஒரு பால் உறவுக்காரர்கள் அல்லது திருநங்கையாக இருந்தால், அவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் எனக் கூறியது பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன.

படத்தின் காப்புரிமை ADEK BERRY/AFP/Getty Images

மாறுபட்ட பாலியல் நடத்தை என்று அதிகாரிகளால் வர்ணிக்கப்பட்டுள்ள நடவடிக்கையில் ஒருவர் ஈடுபட்டிருந்தாலோ அல்லது அவர்கள் பலருடன் பாலியல் உறவு கொள்ளும் நடத்தை கொண்டிருந்தாலோ , அவர்கள் அந்த பதவிக்கு கருதப்படமாட்டார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது .

விண்ணப்பதாரர்கள் அவர்கள் இந்த வேலைக்குப் பொருத்தமானவர்கள்தான் என்று ஒரு மருத்துவரின் சான்றிதழ் மூலம் நிரூபிக்க வேண்டும் .

இந்த விளம்பரத்தில் வெளிப்படும் மனோநிலை " சீற்றத்தை ஏற்படுத்துமளவிலான பழமை" என விமர்சகர் ஒருவர் விவரித்தார்.

ஒரு பால் உறவுக்காரர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு எதிரான பாரபட்சம் அதிகரித்து வருகிறது என மனித உரிமைகள் குழுக்கள் தெரிவிக்கின்றன.