மியான்மரில் ரக்ஹீன் மாகாண வன்முறையில் 10 பேரை சுட்டுக் கொன்றது ராணுவம்

மியான்மாரில் உள்ள ரக்ஹீன் மாகாணத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக வன்முறை நடைபெற்று வரும் நிலையில், 10 பேரை ராணுவம் கொன்றிருப்பதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மியான்மர் ரக்ஹீன் மாகாண வன்முறையில் 10 பேரை சுட்டுக் கொன்றது ராணுவம்

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு நடைபெற்ற மோதல்களிலே இதுதான் மிகக் கொடூரமானதாகும்.

துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் கம்புகளுடன் படையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் அப்பாவி கிராமவாசிகள் கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் ரொஹிங்கா முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தாக்குதல்தாரிகளை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் காவல்துறை

பெளத்த மற்றும் ரொஹிங்கா சமூகங்கள் இடையே ரக்ஹீன் மாகாணம் பெரியளவில் தீவிரமாக பிளவுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல தசாப்தங்களாக அந்தப் பகுதியில் ரொஹிங்கா முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர்.

ஆனால், அவர்களை குடிமக்களாக அங்கீகரிக்க மியான்மர் அரசாங்கம் மறுத்து வருகிறது.

தொடர்புடைய தலைப்புகள்