மாற்றங்களைக் கொண்டுவராவிட்டால், அடுத்த தேர்தலில் கணவருக்கு ஆதரவு இல்லை - நைஜீரியா அதிபரின் மனைவி

நைஜீரியாவின் முதல் பெண்மணி, தனது கணவரும் நாட்டின் அதிபராக உள்ளவருமான, முகமது புஹாரி, அரசாங்கத்தில் மாற்றம் கொண்டுவராமல், அடுத்த தேர்தலில் போட்டியிட்டால், அவருக்குத் தான் ஆதரவு அளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை GettyImages-475103118.jpg
Image caption மாறாவிட்டால் ஆதரவு இல்லை : கணவர் முகமது புஹாரியுடன் நைஜீரியாவின் முதல் பெண்மணி ஆயிஷா புகாரி (கோப்புப்படம்)

பி பி சியிடம் பேசிய ஆயிஷா புகாரி, ஆளும் கட்சியின் (ஏபிசி) லட்சியங்களைப் பகிர்ந்து கொள்ளாதவர்கள் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

அவர் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தான் வெற்றி பெற உதவிய ஆதரவாளர்களுக்குத் தனது கணவர் செவி சாய்க்கவேண்டும் என்று கூறினார்.

ஆயிஷா புகாரி தனது கணவர் பதவிக்கு வந்தவுடன், கட்சித் தொண்டர்களுக்கு பரிசாக, பதவிகள் மற்றும் வேலை கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்தவர்களுக்காகப் பேசுகிறார் என்று தோன்றுவதாக அபுஜாவில் உள்ள ஒரு பிபிசி செய்தியாளர் கூறியுள்ளார்.