தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட்டின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள குவியும் மக்கள் கூட்டம்

எழுபது ஆண்டு காலம் நீடித்த ஆட்சிக்கு பின்னர் காலமான , தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட்டின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்க்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேடுக்கு அஞ்சலி செலுத்த அரண்மனை முன்பு காத்திருக்கும் மக்கள்

அரச இறுதிச்சடங்கின் ஒரு பகுதியாக,நடத்தப்படும், மன்னரின் புகைப்படத்தின் மீது நீரை ஊற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அவர்கள், கருப்பு உடையை அணிந்து, தலைநகர் பாங்காக்கில் கிராண்ட் அரண்மனை முன் வரிசையில் நிற்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேடுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்

அவர் இறந்த மருத்துவமனைக்கு வெளியே ஏராளமானவர்கள் கூட்டமாகக் காத்திருக்கின்றனர். அடுத்த சில மணி நேரங்களில், அவரின் சவப்பெட்டி, அரண்மனை மைதானத்தில் உள்ள ஒரு கோவில் வைக்கப்படும்.

படத்தின் காப்புரிமை Getty Images

கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. தொலைக்காட்சிகளில் பூமிபோன் அடூன்யடேட்டின் வாழ்க்கை பற்றிய ஆவணப்படங்கள் ஒளிபரப்படுகிறது.