வடக்கு சிரியாவில், துருக்கியின் எல்லை அருகே,கார் குண்டு வெடிப்பில்,17 பேர் பலி

வடக்கு சிரியாவில், துருக்கியின் எல்லை அருகே, நிகழ்ந்த ஒரு கார் குண்டு வெடிப்பில்,குறைந்தது பதினேழு பேர் கொல்லப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை NAZEER AL-KHATIB/AFP/Getty Images)

சோதனைச் சாவடியில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ''சுதந்திர சிரிய ராணுவம்'' (Free Syrian Army) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பைச் சேர்ந்த ஜிஹாதிகளுக்கு எதிராக, இந்தக் குழு வடக்கு சிரியாவில் துருக்கிய படைகளோடு சண்டையிட்டு வருகிறது.

இந்தக் குண்டு வீச்சில் காயமடைந்த டஜன் கணக்கான மக்கள், சிரிய நகரமான அல் ஆசாசில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.