மறைந்த மன்னருக்கு மரியாதை செலுத்த கறுப்பு நிற ஆடைகளோடு குவிந்த மக்கள்

வியாழக்கிழமை காலமானதாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட்டின் உடல் எடுத்து செல்லப்படுவதை காண்பதற்கு கறுப்பு நிற உடைகள் அணிந்து பல லட்சக்கணக்கான மக்கள் பாங்காக் சாலையோரமாக அணிவகுத்து காணப்படுகின்றனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption மன்னரின் இறுதி ஊர்வலத்தின்போது மரியாதை செலுத்த ஆயிரக்கனக்கானோர் வரிசையாக பாங்காக்கின் தெருக்களில் நிற்கின்றனர்

பட்டத்து இளவரசர் உடன் செல்ல, பூமிபோன் அடூன்யடேட்டின் உடல், அவர் இறந்த மருத்துவமனையில் இருந்து அரண்மனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மன்னரின் இறப்பையெட்டி நடத்தப்பட்ட சடங்குகளில் பிரதமர் ப்ரயூத் சான் ஒச்சா கலந்து கொண்டார்

மன்னரின் உடலை தாங்கிய வாகன அணி கடந்து சென்றபோது, படையினர் மண்டியிட்டு மரியாதை செலுத்தினர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption நாட்டை ஒற்றுமைப்படுத்தும் சக்தியாக பார்க்கப்பட்ட மன்னரின் இறப்பு தாய்லாந்திற்கு மாபெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது

சிலர் கண்ணீர் விட்டாலும், மரியாதை செலுத்த காத்திருந்த மக்கள் கூட்டம் பெரும்பாலும் அமைதியை கடைபிடித்தது.

பூமிபோனின் மறைவால் ஏற்பட்டுள்ள உண்மையான துக்கத்தின் வெளிப்பாடுகளை பார்க்கக்கூடியதாக உள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்