கோமாளி முகமூடி அணிந்து தாக்குதல்கள் அதிகரிக்கும் ஸ்வீடன்

ஸ்பெயினின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள வார்பெர்க் நகரில் ஒரு பதின்ம வயதினரை குத்தி, காயப்படுத்திய கோமாளி முகமூடி அணிந்த நபரை தேடி வருவதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கோமாளி உடையணிந்த கொலையாளி மீதான ஆர்வத்தால் தூண்டப்படுபவையாக கூறப்படும் இந்த சம்பவம் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் பரவியிருக்கிறது

கோமாளிகள் போன்று ஆடை அணிந்த இருவர், பெண்ணொருவரை கொலை செய்ய மிரட்டியது உள்பட, நாடு முழுவதும் இதை போன்று பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக காவல்துறையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதம் தொடங்கிய கோமாளி உடையணிந்த கொலையாளி மீதான ஆர்வத்தால் தூண்டப்படுபவையாக கூறப்படுவதன் ஒரு பகுதியாக இந்த தாக்குதல்கள் தோன்றுகின்றன. இதே போன்ற ஆர்வம் ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் பரவியிருக்கிறது.

இது குழந்தைகளை பயமுறுத்துவதோடு, சமூக ஆதாரங்களை வீணடிக்கிறது என்று கூறி இந்த செய்ல்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர பல நாடுகளின் காவல்துறையினர் அழைப்புவிடுத்துள்ளனர்.