எகிப்து: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 படையினர் பலி

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

எகிப்தின் சைனாய் தீபகற்பத்தில் உள்ள ராணுவ சோதனைசாவடி மீது இஸ்லாமியவாத தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவர்கள் நடத்திய தாக்குதலில் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெய்ர் அல்-அப்த் நகர் அருகே நடைபெற்ற இந்த தாக்குதலில் எட்டு படையினர் காயம் அடைந்துள்ளனர்.

சைனாயில் சமீப நாட்களில் தீவிரவாத வன்முறை சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ளன.

இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் அமைப்பினருடன் தொடர்பில் உள்ள உள்ளூர் குழு ஒன்று தீவிரவாதிகளை வழிநடத்தி உள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்