காம்பியாவில் அதிபர் தேர்தலில், பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம்

  • 15 அக்டோபர் 2016

காம்பியாவில், டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில், அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து, அதிபர் யாயு ஜம்மெவை எதிர்த்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்த உடன்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

தேச நலன் கருதி தங்களது கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைப்பதாக அவர்கள், பான்ஜூல் நகரத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

வேட்பாளர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.

1994 ல் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த யாயு ஜம்மெ, தற்போது வரை காம்பியாவை ஆட்சி செய்து வருகிறார்.