தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட்டுக்கு மரியாதை செலுத்த நீண்ட வரிசையில் மக்கள்

தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட்டுக்கு இறுதி மரியாதை செலுத்த, ஆயிரக்கணக்கான மக்கள், தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள கிராண்ட் அரண்மனைக்கு வெளியே நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட்டுக்கு மரியாதை செலுத்த கண்ணீருடன் காத்திருக்கும் ஒரு பெண்

கருப்பு உடையை அணிந்துள்ள, துக்கம் கடைப்பிடிக்கும் மக்கள், சிறு குழுக்களாக அரண்மனைக்குள் அனுப்படுகின்றனர்.

அரண்மனையில், இரங்கல் குறிப்பு எழுத வைக்கப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில் கையொப்பமிட அனுமதிக்கப்படுகின்றனர்.

கிராமப்புறங்களில் உள்ள மக்கள், நகரத்திற்குப் பயணம் செய்ய, இலவச போக்குவரத்து வசதி அளிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில், இரங்கல் செய்தியை எழுதும் ஒரு பள்ளி மாணவி

சில கடைகள் மது விற்பனையை நிறுத்தியுள்ளன. மேலும், படையினர் மதுக்கடைகளைக் குறித்த நேரத்துக்கு முன்னதாகவே மூட உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

மன்னரின் மரணத்திற்குப் பின், 96 வயது முன்னாள் பிரதமர், பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.