சீனாவில் கைதாகியிருக்கும் குடிமக்கள் பற்றி விசாரிக்கும் ஆஸ்திரேலியா

கிரவுன் ரிசாட்ஸ் என்ற ஆஸ்திரேலிய நிறுவனத்தின் பிற பணியாளர்களோடு தங்களது நாட்டை சேர்ந்த மூன்று குடிமக்களும் சீனாவில் கைது செய்யப்பட்டிருப்பது பற்றிய அறிக்கைகளை ஆஸ்திரேலிய அரசு விசாரித்து வருகிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சீனாவில் மேற்கொள்ளப்படும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளால் மக்கௌவிலும் பாதிப்பு

ஜேம்ஸ் பேக்கர் என்ற பெரும் செல்வந்தரின் இந்த நிறுவனத்தின் சில ஊழியர்கள் சீன ஆட்சியாளர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதை அது உறுதி செய்திருக்கிறது.

இந்த குழுவினர் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

கிரவுன் நிறுவனம் ஒரு சீன நிறுவனத்தோடு கூட்டாக சீன நிலப்பரப்பான மக்கௌவில் ரிசார்ட்ஸ் எனப்படும் பல உல்லாச ஓய்வகங்களை நடத்தி வருகிறது.

சீனாவில் மேற்கொள்ளப்படும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளால் மக்கௌவும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்