நீஸ் நகரில் இறந்தோருக்கு பிரான்ஸ் அதிபர் அஞ்சலி

ஜூலை மாதம் நீஸ் நகரில் பிரான்ஸின் தேசிய நாளை கொண்டாடிய மக்கள் கூட்டத்தினர் மீது நடத்தப்பட்ட லாரியால் தாக்குதலில் கொல்லப்பட்ட 86 பேரின் நினைவு நிகழ்வுக்கு அந்நாட்டின் அதிபர் பிரான்சுவா ஒலாந்த் தலைமை தாங்கினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பிரான்சின் தேசிய கீதம் ஒலிக்க தொடங்கிய இந்த நிகழ்வில், பலியானோர் ஒவ்வொருவரின் பெயரும், வயதும் வாசிக்கப்பட்டு மலர்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

முகமது லாஹவேஸ் பூகலெல் என்ற துனீசிய நபரால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

படத்தின் காப்புரிமை AFP

இஸ்லாமியவாத கடும்போக்காளரான பூகலெல் இந்த தாக்குதலை நடத்த பல மாதங்கள் திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்