சிரியா: ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள டபிக் நகரை கைப்பற்ற முன்னேறி வரும் போராளி குழுக்கள்

சிரியாவில் துருக்கி ஆதரவு பெற்ற போராளிகள் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள டபிக் நகரை நோக்கி முன்னேறி வருகின்றனர். அங்குதான், நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போரில் நன்மை வெல்லும் என்ற இறைவாக்கு முழுமை பெறுவதாக ஜிஹாதிகள் நம்புகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிரியாவில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள டபிக் நகரை கைப்பற்ற முன்னேறி வரும் போராளி குழுக்கள்

துருக்கி அதிபர் ரசீப் தாயிப் எர்துவான் போராளிகளின் முன்னேற்ற நடவடிக்கையை உறுதிபடுத்தியுள்ளார். இந்த முன்னேற்றம் ஒரு புதிய கட்டத்தில் நுழைந்து வருவதாக ஆர்வலர்களும், போராளிகளும் தெரிவித்துள்ளனர்.

சிரியாவின் வடமேற்கில் உள்ள டபிக் நகரம் இரண்டு ஆண்டுகளாக ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நகரத்தை குறிக்கும் வகையில் ஐ.எஸ் அமைப்பு அதன் இணைய இதழுக்கு டபிக் என பெயரிட்டது.

ஐ.எஸ் அமைப்பின் பிரச்சார முக்கியத்துவத்தையும், அடையாளத்தையும் டபிக் கோடிட்டு காட்டுகிறது.

ஆனால், அதிகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் நிலையில், எதிர்வரும் டபிக் நகருக்கான போர், இஸ்லாம் மற்றும் கிறித்துவம் இடையே பேரழிவு ஏற்படுத்தக்கூடிய மோதலாக இருக்காது என ஐ.எஸ் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்