நைஜரில் அமெரிக்க தொண்டு நிறுவன பணியாளர் கடத்தல்

  • 15 அக்டோபர் 2016

நைஜரில் அமெரிக்க தொண்டு நிறுவன பணியாளரின் பாதுகாவலர்களை கொன்றுவிட்டு, அவரை ஆயுததாரி ஒருவர் கடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இந்த தாக்குதல் மேற்கு நகரமான அபாலக்கில் நடைபெற்றுள்ளது.

அந்த தொண்டு நிறுவன பணியாளரின் வீட்டிற்கு ஒரு கடத்தல்காரர் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும், அதன் பின் அவரோடு நான்கு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சேர்ந்து கொண்டதாகவும் அபாலக் மேயர் தெரிவித்துள்ளார்.

சிறிது நேரம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து, அந்த தொண்டு நிறுவன பணியாளரை கடத்திக்கொண்டு, மாலி உடனான எல்லைப்பகுதியை நோக்கி வாகனத்தில் சென்றுள்ளனர்.

பல ஆண்டுகளாக அந்த நகரில் அமெரிக்க பிரஜை பணி செய்து வந்ததாகவும், பலரால் அறியப்பட்டு மற்றும் உள்ளூர் மொழி பேசுபவராகவும் அவர் இருந்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய தலைப்புகள்