தென்னாப்ரிக்கா: கல்வி கட்டணக் குறைப்பு போராட்ட தலைவர் கைது

  • 16 அக்டோபர் 2016

தென்னாப்ரிக்க மாணவர் போராட்ட இயக்கத் தலைவர்களில் ஒருவர் ஜோஹான்னிஸ்பர்க்கிலுள்ள விட்வாடெஸ்ரான்ட் பல்கலைக்கழத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Image caption கல்வி கட்டணங்கள் குறைக்கப்படுவதற்கான போராட்டத்தில் மிகவும் தீவிரமாக பங்கெடுத்தவர் தலாமினி

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அவரது அறையில் இருந்து காவல்துறையினர் மெக்யிபோ தலாமினியை கைது செய்து அழைத்து சென்றதாக மாணவர் கவுன்சில் தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption இலவசக் கல்வி வழங்க கோரி மாணவர்கள் போராட்டம்

காவல்துறையோடு வன்முறை மோதல்களில் ஈடுபட்ட, கல்வி கட்டணங்கள் குறைக்கப்படுவதற்கான போராட்டத்தில் மிகவும் தீவிரமாக பங்கெடுத்தவர் தலாமினி.

இலவச கல்வி வழங்க வேண்டும் என்று கோரி, மாணவர்கள் போராடி வருவதால், தென்னாப்ரிக்கா முழுவதும் பல்கலைக்கழகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்