அமெரிக்க ஓட்ட பந்தய வீரர் டைசன் கேயின் மகள் சுட்டுக் கொலை

அமெரிக்க ஓட்ட பந்தயவீரர் டைசன் கேயின் 15 வயது மகள் கென்டகி மாநிலத்தில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Instagram
Image caption இரண்டு கார்களில் இருந்தவர்களுக்கிடையில் நடைபெற்ற துப்பாக்கிக்சூட்டில் டிரினிட்டி கே சுடப்பட்டு இறந்தார்

லெசிங்டன் நகரில் காலையில் வேளையில் இரண்டு வாகனங்களுக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்ல் கழுத்தில் சுடப்பட்ட டிரினிட்டி கே அந்த இடத்திலேயே இறந்து விட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக, இருவரைக் கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களை விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.

100 மீட்டர் ஓட்ட பந்தய வீரர்களில், வரலாற்றிலேயே மிக வேகமாக ஓடுபவர் என்ற பெருமைக்குரிய ஜமைக்காவின் உசேயின் போல்ட்டிற்கு அடுத்த நிலையில் உள்ளவர் தான் டைசன் கே.

படத்தின் காப்புரிமை AFP/getty
Image caption ரியோ ஒலிம்பிக்கில் டைசன் கே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றார் Mr Gay represented the US at the Rio Olympics

தசை மற்றும் எலும்பு வளர்ச்சியை தூண்டுகின்ற அனபோலிக் ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக ஊக்க மருந்து சோதனையின் முடிவுகள் வந்ததால் இரண்டு ஆண்டுகள் விளையாட்டு போட்டிகளில் இருந்து டைசன் கே தடைசெய்யப்பட்டார். அதனால், 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது..

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர்,ஓட்டம் 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் டைசன் கே தங்கப்பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்