விண்வெளி நிலைய பயணத்துக்கு தயாராகும் சீனா

விண்வெளி ஆராய்ச்சியில் சீனா அதன் திறனை அதிகரிக்கும் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக திங்கட்கிழமை காலை பூமியின் சுற்றுப்பாதையில் இரு விண்வெளி வீரர்களை சீனா அனுப்ப உள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption கடந்த செப்டம்பர் மாதம் விண்வெளி நிலையத்தை சுமந்து சென்ற சீன ராக்கெட்

வடக்கு சீனாவில் உள்ள ஜியோசுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்திலிருந்து விண்வெளி வீரர்கள் புறப்பட உள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் உள்ள டியென்கோங் 2 விண்வெளி நிலையத்தை சென்றடைந்து அங்கு 30 நாட்கள் தங்கி வாழ்வதற்கான திறனை சோதிக்கும் வகையில் அவர்களுடைய பயண திட்டம் அமைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption விண்வெளி வீரர்கள் ஜின் ஹாய்பெங் மற்றும் சென் டூங்

சீனாவின் தற்போதைய மற்றும் முந்தைய விண்வெளி பயணங்கள், நிலவு அல்லது செவ்வாய் கிரகத்திற்கு மனிதரை அனுப்பும் சாத்தியமான முயற்சிகளுக்கு கட்டியம் கூறுவதாக பார்க்கப்படுகின்றன.

தொடர்புடைய தலைப்புகள்