தெற்கு சோமாலியாவில் இஸ்லாமியவாத தீவிரவாதிகளின் மனைவிகள் நகரைவிட்டு வெளியேற உத்தரவு

தெற்கு சோமாலிய நகரமான பர்தேரில் உள்ள இஸ்லாமியவாத தீவிரவாதிகளின் மனைவிகளை ஒரு வார காலத்திற்குள்ளாக நகரைவிட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

தங்கள் கணவர்களுக்காக மனைவிகள் உளவு பார்த்ததாக மாவட்ட ஆணையர் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், அவர்கள் ஊரை விட்டு செல்லாத பட்சத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெகுவிரைவில் அவர்களை நகரிலிருந்து வெளியேற்றும் ராணுவ நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, இஸ்லாமியவாத குழுவான அல் ஷபாப் பர்தேர் நகரம் மீதான கட்டுப்பாட்டை இழந்தது. ஆனால், தொடர்ந்து அடிக்கடி அங்கு தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்