ஏமனில் உடனடியாக நிபந்தனையற்ற போர் நிறுத்தம்: அமெரிக்க, பிரிட்டன் கோரிக்கை

ஏமனில் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை இன்னும் சில தினங்களில் அமலாக்க வேண்டி அமெரிக்காவும், பிரிட்டனும் அழைப்பு விடுத்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி மற்றும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன்

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி மற்றும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் லண்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.

ஏமனில் ஹூதி போராளிகளுக்கு எதிராக செளதி தலைமையிலான கூட்டணி படையினர் நடத்தி வரும் குண்டு வீச்சுத் தாக்குதல்களுக்கு இரு நாடுகளும் ஆதரவு வழங்கி வருகின்றன.

இந்த தாக்குதல்களின் போது பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்