30 மில்லியன் டாலர் பணமாக வைத்திருந்த சீன ஊழல் அதிகாரிக்கு மரண தண்டனை

தன்னுடைய வீட்டில் 30 மில்லியனுக்கு மேலான டாலர் பணத்தைமறைத்து வைத்திருந்த முன்னாள் சீன அதிகாரி ஒருவருக்கு இடைநிறுத்தப்பட்ட மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption சீனாவின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் அதிபர் ஷி ஜின்பிங்கின் அரசியல் போட்டியாளர்கள் சிலரின் வீழ்ச்சிக்கு வழிகோலியுள்ளது

சீனாவின் நிலக்கரி வர்த்தகத்தை மேலாண்மை செய்த மூத்த அதிகாரி வெய் பெங்யுவான்.

நிலக்கரி பணித்திட்டங்களை அனுமதித்தபோது, அவர் பெருந்தொகை கையூட்டு பெற்றிருப்பதாக சீனாவின் வட பகுதியிலுள்ள பாவ்திங் நகர நீதிமன்றம் ஒன்று கூறியிருக்கிறது.

அவருடைய வீட்டில் இருந்த டாலர் பண இருப்பை கணக்கிட்டபோது, நான்கு பணம் எண்ணும் இயந்திரங்களே உடைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

சீனாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஊழல் தடுப்பு நடவடிக்கைகளால். நூற்றுக்கணக்கான அதிகாரிகள் தண்டனை பெற்று வருகின்றனர்.

இது, சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அரசியல் போட்டியாளர்கள் சிலரின் வீழ்ச்சிக்கும் இட்டு செனறுள்ளது

தொடர்புடைய தலைப்புகள்