மியான்மரில் படகு கவிழ்ந்து 14 பேர் பலி

மியான்மரிலுள்ள சின்டிவின் நதியில் ஒரு படகு கவிந்துவிட்டதால் குறைந்தது 14 பேர் பலியாகியுள்ளதாக மீட்புதவி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அதிக எடையால் படகு கவிழ்ந்திருக்கலாம் என்று மியான்மரின் ஆட்சியாளர்கள் தெரிவிப்பு (கோப்புப்படம்)

சனிக்கிழமை அன்று இந்த படகு மிக விரைவாக மூழ்கி விட்டதால், அதற்குள் இருந்த பலரும் சிக்கிய நிலையில், இன்னும் 85 பயணிகளை காணவில்லை.

எடை மிகுந்து விட்டதால் இந்த படகு கவிழ்ந்திருக்கலாம் என்று மியான்மரின் ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழக மாணவர்களையும், அவர்களின் பேராசிரியர்களையும் உள்ளடக்கிய பெரிய குழுவினரை இந்த படகு ஏற்றி சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்