இரு சீன விண்வெளி வீரர்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்த ராக்கெட்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பயணத்தில் இதுவரை தான் மேற்கொண்டதிலேயே மிக நீண்ட விண்வெளி பயணத்தை சீனா மேற்கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டியென்கோங் 2 விண்வெளி நிலையத்தில், ஜின் ஹாய்பெங் மற்றும் சென் டூங் ஆகிய இருவரும், 30 நாட்கள் தங்கியிருந்து அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள்.

இரு விண்வெளி வீரர்கள் பூமியின் சுற்றுப்பாதைக்கு ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வீரர்கள் கடந்த மாதம் புதிதாக விண்ணில் செலுத்தப்பட்ட டியென்கோங் 2 என்ற விண்வெளி நிலையத்துடன் இணைய உள்ளனர்.

டியென்கோங் 2 விண்வெளி நிலையத்தில், ஜின் ஹாய்பெங் மற்றும் சென் டூங் ஆகிய இருவரும், 30 நாட்கள் தங்கியிருந்து அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இரு சீன விண்வெளி வீர்ர்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்த ராக்கெட்

சீனாவை உருவாக்குவதில் இந்த விண்வெளி வீரர்களின் பயணம் பெரும் பங்களிப்பாக இருக்கும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீனா அனுப்பிய யுடூ அல்லது 'ஜேட் ராபிட்' என்றழைக்கப்பட்ட இயந்திர ரோபோ நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகிவிட்டன.

தொடர்புடைய தலைப்புகள்