கென்யா: வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ள அந்நாட்டின் தேசிய விமான நிறுவன விமானிகள்

கென்யாவில் வரும் செவ்வாய் கிழமையன்று, அந்நாட்டின் தேசிய விமான நிறுவனமான கென்யா ஏர்வேஸின் விமானிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

அதனை தவிர்ப்பதற்காக, நஷ்டத்தில் இயங்கி வரும் விமான நிறுவனத்தின் நிர்வாகம் விமானிகளின் தொழிற்சங்கத்தை சந்திக்க உள்ளது.

விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைவர் ஆகிய இருவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யக்கோரி விமானிகளின் தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

விமான நிறுவனத்தில் பல ஆண்டுகளாக ஏற்பட்ட இழப்புகள், ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் ஆகியவற்றை சீர் செய்ய இருவரும் தேல்வியடைந்துவிட்டதாக விமானிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

சமீப தினங்களில், கென்ய விமான நிறுவன பணியாளார்கள் சிலர் வெளிநடப்பு செய்தததால் அந்நிறுவனத்தின் பல விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

கென்யா ஏர்வேஸ் பல பகுதிகளுகளுக்கு விமான சேவை வழங்கி வருவதால் ஆஃப்ரிக்காவில் இது ஒரு முக்கிய பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்