ரஷ்யாவின் பிரபல தொலைக்காட்சியின் வங்கிக் கணக்குகள் பிரிட்டனில் முடக்கம்

ரஷ்யாவின் சர்வதேச தொலைக்காட்சி நிறுவனமான ஆர்.டி, பிரிட்டனில் இருந்த தங்கள் நிறுவனத்தின் வங்கிக்கணக்குகள் எந்தவொரு உரிய விளக்கமின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நேட்வெஸ்ட் வங்கி

நேட்வெஸ்ட் வங்கி ஆர்.டியிடம், இந்த முடிவு இறுதியானது என்றும், இதுதொடர்பாக எந்த பேச்சுவார்த்தைக்கும் ஈடுபடப்போவதில்லை என்றும் கூறியதாக அரசு உதவிப்பெறும் ஆர்.டி தொலைக்காட்சியின் ஆசிரியர் மார்கரீட்டா சிமொனியன் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைவரும் புரிந்து கொள்ளும்படி, ''பேச்சு சுதந்திரத்தை போற்றுவோம்'' என்று கிண்டலாக கூறியுள்ளார்.

இதுவரை பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்தோ அல்லது நேட்வெஸ்ட் வங்கியிடமிருந்தோ எந்த பொது கருத்துக்களும் வெளிவரவில்லை.

யுக்ரைன் மற்றும் சிரியா விவகாரங்களில் ஒரு பக்கச் சார்பான மற்றும் தவறாகப் புரிந்துகொள்ளப்படக்கூடிய செய்திகளை வெளியிட்டதற்காகவும், பிரிட்டனின் ஒளிபரப்பு ஆணையம் முன்னர் ஆர்.டி தொலைக்காட்சி மீது தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்