எத்தியோப்பியாவில் வன்முறையை தூண்டியதாக 1000 பேர் கைது

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கலவரத்தின் போது சேதப்படுத்தப்பட்ட வாகனங்கள்

எத்தியோப்பிய தலைநகர் அட்டிஸ் அபபாவிற்கு அருகில் வன்முறையை தூண்டிவிட்டதாக சந்தேகிக்கப்பட்டு, குறைந்தது 1000பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அரசிற்கு உட்பட்ட தொலைக்காட்சியான ஃபனா தெரிவித்துள்ளது

கைது நிகழ்ந்த நகரான சபீட்டாவின் மேயர், கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உள்ளூர்வாசிகள் இல்லை என தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள், ஒரு வருட காலத்திற்கும் மேலாக நடந்த அரசிற்கு எதிரான போராட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒரோமியா பிராந்தியத்தின் பிற பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.

கலவரத்தின் போது பாதுகாப்பு படையினர்களுடன் ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.

கடந்த வாரம் எத்தியோப்பிய அரசு அவசர நிலையை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.