மொசூல் நகரை மீண்டும் கைப்பற்றுவதற்கான தாக்குதல் ஆரம்பம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மொசூல் நகரை மீண்டும் கைப்பற்றுவதற்கான தாக்குதல் ஆரம்பம்

இராக்கில் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் வசமுள்ள ஒரே நகரான மொசூலை கைப்பற்றுவதற்கான சண்டை ஆரம்பமாகியுள்ளது.

இராக்கிய மற்றும் குர்துப்படையினர் சுமார் முப்பதினாயிரம் பேர் அமெரிக்க வான் தாக்குதல் ஆதரவுடன் அதிகாலையில் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

ஐ எஸ்ஸை முறியடிப்பதற்கான போரில் ஒரு முக்கிய தருணம் இது என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் இதனை விபரித்துள்ளார்.