மொசூல் நகரத்தில் இரண்டாவது நாளாக தொடரும் ராணுவ தாக்குதல்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிடம் இருந்து மொசூல் நகரத்தை மீட்கும் முயற்சியில் இராக் ராணுவம் மற்றும் குர்து பெஷ்மெர்க் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு இரண்டாம் நாளாக ராணுவ நடவடிக்கை தொடர்கிறது.

படத்தின் காப்புரிமை SAFIN HAMED/AFP/Getty Images

தரைப் படைகள் முன்னேறுவதற்கு முன்னதாக, தீவிரவாதிகள் பிடியில் உள்ள இடங்களில் ராணுவ எதிர்ப்பை வலுவிழக்கச் செய்ய, மொசூலில் வான் வழித் தாக்குதல்களை, சர்வதேச கூட்டணி நடத்தியுள்ளது என்று

ஒரு அமெரிக்க தளபதி உறுதி அளித்துள்ளார்.

இதுவரை கூட்டணி படைகள் மூலம் வெற்றிகள் பெரும்பாலும், அடையாளபூர்வமானவை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ். ஒரு பிரச்சார காணொளி வெளியிட்டுள்ளது. அதில், ராணுவ நடவடிக்கைகள் மொசூல் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.