ஏமனில் ஐ.நா. கொண்டு வந்த போர் நிறுத்தம் வியாழனன்று அமல்

  • 18 அக்டோபர் 2016

ஏமனில் வியாழக்கிழமையிலிருந்து அமலாகவுள்ள மூன்று நாட்கள் போர் நிறுத்தத்தை வெளிநாட்டில் இருந்து இயங்கும் ஏமன் அரசாங்கமும் மற்றும் ஷியா ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மதிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP

ஐ.நா. மன்றம் மத்தியஸ்தம் செய்து கொண்டு வந்த இந்த ஒப்பந்தம், ஏமன் நாட்டு மக்கள் மேலும் ரத்தம் சிந்துவதிலிருந்து பாதுகாக்கும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படலாம். ஆனால் முந்தைய போர்நிறுத்த ஒப்பந்தங்கள் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஐ.நா.வின் கணக்குப்படி சுமார் 7,000 பேர் போரில் இறந்துள்ளனர்

ஏமனில் நடக்கும் சண்டை, இரண்டு பிராந்திய சக்திகளான இரான் மற்றும் சௌதி அரேபியாவை இந்த மோதலில் தலையிடச் செய்துள்ளது.

இரான் ஷியா பிரிவை ஆதரிக்கிறது.

சௌதி அரேபியா அதிபர் அப்தராபா மன்சூர் ஹாடியை மீண்டும் பதவியில் அமர்த்த முயலும் சர்வதேச கூட்டணியை வழிநடத்துகிறது.