டிரம்ப் மீதான விமர்சனங்களை நம்பவில்லை : மெலனியா டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக உள்ள டிரம்ப், பெண்களிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்து கொண்டதை பெருமையாகப் பேசியது தொடர்பான விமர்சனங்களால் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கட்டுப்படுத்த முயலும் நடவடிக்கைகளில், அவரது மனைவி அவரை பாதுகாக்கும் வகையில் பேசியுள்ளார் ஆனால் , அவரை மன்னிக்கும் வகையில் பேசவில்லை.

படத்தின் காப்புரிமை AFP

இரண்டு தொலைக்காட்சி பேட்டிகளில், மெலனியா டிரம்ப், டொனால்ட் டிரம்ப் பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசியதற்காக கோரிய மன்னிப்பை தன்னைப் போலவே, அமெரிக்க மக்களும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

அவர், டிரம்பின் கருத்துக்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் வேட்பாளரின் கருத்துக்கள் போன்றதாக இல்லை என்றார்.

மேலும், டிரம்ப் பாலியல் தாக்குதல் நடத்தியதாக சில பெண்கள் சுமத்திய குற்றச்சாட்டை தான் நம்பவில்லை என்றார்.

கருத்துக் கணிப்புக்களில், டிரம்ப் போட்டி வேட்பாளரான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஹிலரி கிளின்டனை விட கணிசமான அளவு பின் தங்கியுள்ளார். அவர் பல குடியரசு கட்சியினரை அந்நியப்படுத்திக் கொண்டார்.

அதிபர் தேர்தலில் தில்லு முல்லுகள் நடக்கும் என்று டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளதற்கு ஆதாரம் அளிக்குமாறு சில குடியரசுக் கட்சியினர் கூறியுள்ளனர்.