இரானிய அமெரிக்கருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த இரான்

  • 18 அக்டோபர் 2016

இரானிய அமெரிக்க வர்த்தகர் ஒருவருக்கும், அவருடைய தந்தைக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக இரானிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இரானிய அமெரிக்க ஆலோசகர் சியாமாக் நமாஸி 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைதானார்

சியாமாக் நமாஸியும், அவருடைய தந்தையும் யுனிசெப் பிரதிநிதியுமான பகுவர் நமாஸியும் இரானுக்கு விரோதமான அமெரிக்க அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு தெஹரானில் பயணம் மேற்கொண்டபோது, சியாமாக் நமாஸி கைது செய்யப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பகுவர் நமாஸியின் உடல்நிலை பெரிய கேள்விகுறி என்று அவரது குடும்பத்தினர் தெரிவிப்பு

ஷாயின் கீழுள்ள இரானின் எண்ணெய் வளம் கொண்ட குஸெஸ்தான் மாகாணத்தில் ஆளுநராக பகுவர் நமாஸி பணியாற்றியுள்ளார்.

அமெரிக்க அரசிடம் இருந்தோ, நமாஸியரின் ஆதரவாளர்களிடம் இருந்தோ இதுபற்றி எவ்வித கருத்தும் வெளியாகவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்