மொசூல் நகரை மீட்க இராக் படைகளின் இறுதிப்போராட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மொசூல் நகரை மீட்க இராக் படைகளின் இறுதிப்போராட்டம்

  • 18 அக்டோபர் 2016

இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பிடம் இருந்து இராக்கின் மொசூல் நகரை மீட்பதற்கான சண்டையை இரண்டாவது நாளாக இராக்கிய மற்றும் அதன் கூட்டணிப் படைகள் நடத்துகின்றன.

தாம் திட்டமிட்டதைவிட சண்டை வேகமாக முன்னேறுவதாக பெண்டகன் கூறியுள்ளது.

ஆனால், தாம் தற்கொலை தாக்குதல்கள் மூலம் கவச வாகனங்களை நிர்மூலம் செய்வதாக தீவிரவாதிகள் கூறுகிறார்கள்.

தென் பகுதியில் இருந்து முன்னேறும் ஒரு இராக்கிய படைப்பிரிவுடன் பிபிசி குழு ஒன்றும் அங்கு செல்கிறது.

போரின் முன்னரங்கிலிருந்து அவர்கள் அனுப்பும் பிரத்யேக செய்தித்தொகுப்பு.