கலேயிலிருந்து பிரிட்டனுக்குள் வரும் குழந்தைக் குடியேறிகள் வயதை உறுதிப்படுத்த மேலதிக சோதனை

பிரெஞ்சு துறைமுகமான கலேயில் இருந்து வரும் சிலர், குழந்தை அல்லாமல் வளர்ந்தவராக இருக்கக்கூடும் என்ற கருத்துக்களை அடுத்து, குடியேறிக் குழந்தைகளின் வயதை சரிபார்க்க மேலதிக சோதனைகள் நடத்தப்படும் என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

படத்தின் காப்புரிமை PHILIPPE HUGUEN/AFP/Getty Images

குடியேறி குழந்தைகள் என்று கருதப்படுவோர் மேலும் அதிகாரிகளால் விசாரணை மற்றும் அவர்களின் கைரேகை பதிவு செய்யப்படுவது போன்ற சோதனைகளை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளும் கான்செர்வேடிவ் கட்சியின் எம்.பி.யான டேவிட் டேவிஸ், குடியேறிகள் வயதை முடிவு செய்ய, அவர்களின் பற்களை சோதனை செய்யுமாறு கோரியுள்ளார்.

பிரிட்டிஷ் பல்மருத்துவ சங்கம் இது போன்ற சோதனைகள் தொழில்முறை ஒழுக்கம் சார்ந்தது அல்ல என்றும் துல்லியமானதாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில், தாற்காலிக முகாமாக உள்ள கலே மூடப்படுவதற்கு முன்பு, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடியேறிக் குழந்தைகளை ஏற்றுக்கொள்வதாக பிரிட்டன் ஒப்புக்கொண்டது.

முதல் குழு குழந்தைக் குடியேறிகள் இந்த வார தொடக்கத்தில் வந்தடைந்தனர். இன்று பின்னதாக மற்றொரு டஜன் குழந்தைக் குடியேறிகள் வரவுள்ளனர்