காங்கோ ஜனநாயக குடியரசில் பொது வேலைநிறுத்தம்

காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள மக்கள் பலர் நாடளாவிய பொது வேலை நிறுத்தம் ஒன்றுக்கு எதிர்க்கட்சிகள் விடுத்த அழைப்பை அனுசரிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

கடைகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு, வழக்கத்தை விட அமைதியாக தலைநகர் கின்ஷாஷாவின் வீதிகள் காணப்பட்டன.

அதிபர் ஜோசப் கபிலாவின் தற்போதைய பதவிக்காலம் வரும் டிசம்பரில் முடியும் போது அவர் பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன.

அடுத்த மாதம் நடைபெறுமென எதிர்பார்க்கப்பட்ட தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டன.

கடந்த மாதம் பாதுகாப்புப் படையினர் மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் நடந்த மோதல்களில், குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.