முடங்கிய உக்ரைன் சமாதான உடன்படிக்கை பேச்சுவார்த்தை தொடக்கம்

  • 19 அக்டோபர் 2016

முடங்கிய உக்ரைன் சமாதான உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் ரஷியா, உக்ரைன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிஆகிய அனைத்துத் தரப்புகளும் எதிர்பார்ப்புகளை மட்டுப்படுத்தியே வெளிப்படுத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

பெர்லினில் நடக்கும் கூட்டத்தில் ரஷியா எந்த வித பெரிய மாற்றங்களையும் எதிர்பார்க்கவில்லை என்று அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் அதிபர் ஏங்கெலா மெர்கெல், அற்புதங்கள் போன்ற நிகழ்வுகள் எதுவும் நடக்கும் வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், முன்னேற்றத்தை அடைய எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்றார்.

முடங்கிய உக்ரைன் மீதான மின்ஸ்க் அமைதி உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளைப் பற்றி நேர்மையான மதிப்பீடுகளைத் தருவதைத் தான் இந்தப் பேச்சுவார்த்தை இலக்காகக் கொண்டுள்ளது என மெர்கெல் தெரிவித்தார்