இணையத்தில் பரவிய புகைப்படத்தால் மாடலாக மாறிய பாகிஸ்தான் டீ விற்பனையாளர்

  • 19 அக்டோபர் 2016

வசீகர தோற்றம் கொண்ட அர்ஷத் கான் என்னும் பாகிஸ்தானின் டீ விற்பனையாளரின் புகைப்படம் இணையத்தில் பரவி பரப்பை ஏற்படுத்திய சூழலில் அவர் மாடலாக பணி்புரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை JIAH ALI INSTAGRAM

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு எளிமையான மார்க்கெட் ஸ்டாலில் டீ விற்பவராக வேலைபார்க்கும், அழகிய தோற்றம் கொண்ட அர்ஷத் கான் என்பவரின் இயல்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது.

இஸ்லாமாபாத்தில் தேநீரை போட்டுக்கொண்டே, தனது கவர்ச்சி மிகுந்த நீலமும் பச்சையும் கலந்த நிறம் கொண்ட கண்களை கொண்டு கேமராவை முறைப்பது போல் அந்த புகைப்படத்தில் அவர் தோன்றுயிருந்தார்.

அவர் போடும் தேநீரை விட `சூடானவாராக இருக்கிறார்` என்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு மத்தியில் உள்ள பதற்றத்தை அவர் குறைக்க கூடும் என்றும் ட்விட்டரில் பெண்கள் பலர் நகைச்சுவையாக கருத்து வெளியிட்டுருந்தனர்.

சில பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல்கள் அவரைத் தேடிப் பிடித்துள்ளன; அவருக்கு 18 வயது என கூறப்படுகிறது.

அர்ஷத் கான் சினிமாவில் நடிக்கத் தயார் என்றும் கூறியிருந்தார். ஆனால் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பலர் போஸ் கொடுப்பதால் தன் பிழைப்பு கெட்டுவிடுகிறது என்றும் தெரிவித்திருந்தார். து.

தொடர்புடைய தலைப்புகள்