பிலிப்பைன்ஸில் அதிக முதலீடுகளை செய்ய சீனா விரும்புகிறது: அதிபர் ஷி ஜின்பிங்

சீன அதிபர் ஷி ஜின்பிங் பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோவை வரவேற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிலிப்பைன்ஸில் அதிக முதலீடுகளை செய்ய சீனா விரும்புகிறது: அதிபர் ஷி ஜின்பிங்

சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையேயான உறவில் பெரியதொரு மாற்றம் நிகழக்கூடும் என்பதன் சமிக்ஞையாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.

தென் சீனக்கடல் பகுதியில், நிலப்பரப்பு மீது போட்டிபோட்டுக் கொண்டு சொந்தம் கொண்டாடும் விவகாரத்தில் சில மாதங்களுக்கு முன் தான் இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான கருத்து வேறுபாடு நிலவி இருந்தது.

ஆனால், பிலிப்பைன்ஸ் அதிபராக கடந்த ஜூன் மாதம் பொறுப்பேற்ற ரொட்ரிகோ டுடெர்டோ, அமெரிக்காவை பாரம்பரியமாக பிலிப்பைன்ஸ் சார்ந்திருக்கும் முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், சீனா மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிலிப்பைன்ஸில் சீனா அதிக முதலீடுகளை செய்ய விரும்புவதாகவும், பிராந்திய வேறுபாடுகள் குறித்து விவாதிப்பதாகவும் ரொட்ரிகோ டுடெர்டோவிடம் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்