மொசூல் நகரின் புறநகர் பகுதியை நெருங்கிவிட்ட இராக் ராணுவம்

இராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான பெரிய தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில், மொசூல் அருகே உள்ள நகர் ஒன்றை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக இராக் படையினர் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மொசூல் அருகே உள்ள நகர் ஒன்றை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக இராக் படையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்களின் ஆதரவோடு இந்த சிறப்பு படையினர் பார்டெல்லா நகரை குறிவைத்து தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தனர்.

அதற்கு சற்று மேலும் வடக்கே, இராக் ராணுவத்தின் துணையுடன் குர்தீஷ் போராளிகளும் நிலப்பரப்பை கைப்பற்றி உள்ளனர்.

ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி மிகப்பெரிய நகரமான மொசூலை மீண்டும் கைப்பற்றுவதே முக்கிய நோக்கமாக உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி மிகப்பெரிய நகரமான மொசூலை மீண்டும் கைப்பற்றுவதே முக்கிய நோக்கமாக உள்ளது.

தற்போது, மொசூல் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் சண்டை நடந்து வருகிறது.

தாக்குதல் தொடுத்துவரும் படையினர் மொசூலின் புறநகர் பகுதியை இன்னும் அடையவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்