அமெரிக்கத் தேர்தல்: முடிந்த விவாதம்- முடியாத மோதல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்கத் தேர்தல்: முடிந்த விவாதம்- முடியாத மோதல்

  • 20 அக்டோபர் 2016

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் இருவருக்கும் லாஸ்வேகாஸில் நடந்த விவாதமே அரசியல் சதுரங்கத்தின் இறுதியான காய்நகர்த்தல்.

ஹிலரி கிளிண்டனுக்கும் டொனால்ட் டர்ம்புக்கும் இடையிலான மூன்றாவது நேரலை தொலைக்காட்சி விவாதம் மீண்டும் இருவருக்கும் இடையிலான தனிமனித தாக்குதலாக முடிந்தது.

தேர்தலில் தோல்வியடைந்தால் அதை ஏற்பது குறித்து குடியரசுக்கட்சியின் வேட்பாளர் உத்தரவாதம் அளிக்க மறுத்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

ட்ரம்பின் இந்த நிலைப்பாடு அமெரிக்க ஜனநாயகத்தின் அடித்தளத்துக்கான சவாலாக வர்ணிக்கப்படுகிறது.