இந்தியா - பாகிஸ்தான் இடையே வீல்சேர் பயன்படுத்துவோருக்கான டி-20 கிரிக்கெட் தொடர்: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி

இந்தியா - பாகிஸ்தான் இடையே, மாற்றுத்திறனாளர்களுக்கான வீல்சேர் டி-20 கிரிக்கெட் தொடர் மலேசியாவில் வியாழக்கிழமை துவங்கியது.

Image caption இரு அணி வீரர்களும் உற்சாக அறிமுகம்

முதல் ஆட்டத்தில், 148 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

மலேசியாவில் முதல் முறையாக நடைபெறும் மாற்றத்திறனாளர்களுக்கான, வீல் சேர் கிரிக்கெட் போட்டி, மலேசிய கிரிக்கெட் சங்க ஒத்துழைப்புடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீல்சேர் கிரிக்கெட் சங்கங்களால் இணைந்து நடத்தப்படுகின்றன.

சர்வதேச அளவில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் போட்டி நடத்தப்படுவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Image caption பாகிஸ்தான் பேட்டிங்

மலேசியாவின் கின்ராரா ஓவல் மைதானத்தில் துவங்கிய இந்தப் போட்டித் தொடர், மூன்று ஆட்டங்கள் கொண்டது. வரும் 22-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும்.

வியாழக்கிழமை நடந்த முதல் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி, 15 ஓவர்களில், 3 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது.

Image caption களத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள்

இந்திய அணி, 14 ஓவர்களில், 67 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே, தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், இரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் ஒன்றுக்கொன்று போட்டிகளைத் தவிர்த்து வரும் நிலையில், இருநாட்டு வீல் சேர் அணிகளும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்