சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகுகிறது தென் ஆஃப்ரிக்கா

  • 21 அக்டோபர் 2016

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து தான் விலகுவதாக ஐக்கிய நாடுகள் சபையிடம் தென் ஆஃப்ரிக்கா தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

இது தொடர்பான மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தென் ஆஃப்ரிக்காவின் நீதித்துறை அமைச்சர் மைக்கெல் மசுதா தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தென் ஆஃப்ரிக்காவின் நீதித்துறை அமைச்சர் மைக்கெல் மசுதா

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக இருப்பதால் தென் ஆஃப்ரிக்கா, பிராந்திய அமைதி மத்தியஸ்தராக செயல்படுவதை தடுப்பதாக உள்ளது என்றும், மேலும் தென் ஆஃப்ரிக்காவுக்கு வருகை தரும் தலைவர்களுக்கு ராஜிய ரீதியான சட்ட பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்க முடியாத நிலை இருப்பதாகவும் மசுதா தெரிவித்துள்ளார்.

சூடான் அதிபர் ஒமர் அல்-பஷீர் ஜோகன்ஸ்பெர்க்கிற்கு வருகை தந்த போது அவரை கைது செய்யக்கோரி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய நீதிமன்ற ஆணையை புறக்கணித்ததற்காக கடந்த ஆண்டு தென் ஆஃரிக்கா கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

மற்ற நாடுகளை புறம் தள்ளிவிட்டு ஆஃப்ரிக்காவின் மீது மட்டும் கவனம் செலுத்தி வருவதாக மற்ற நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

முன்னர், இந்த வாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து ப்ரூண்டி அதன் விலகலை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்