மொசூல் நகருக்குள் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை ஐ.எஸ் அழைத்து சென்றிருப்பதாக ஐ.நா தகவல்

மொசூல் நகரை சுற்றியிருந்த கிராமங்களிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை ஐ.எஸ் குழுவினர் நகருக்குள் அழைத்து சென்றுவிட்டதாக ஐ.நாவின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மனித கேடயங்களாக பயன்படுத்த அழைத்து செல்லப்பட்டிருக்கலாம் என்று அந்த அலுவலகம் கூறியுள்ளது.

அவர்கள் ஒருவேளை மனித கேடயங்களாக பயன்படுத்த அழைத்து செல்லப்பட்டிருக்கலாம் என்று அந்த அலுவலகம் கூறியுள்ளது.

ஒரு கிராமத்தில் சுமார் 40 பொதுமக்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்றுள்ளதாக சொல்லப்படும் தகவல்களையும் விசாரித்து வருவதாக பேச்சாளர் ரவினா ஷம்தசானி தெரிவித்துள்ளார்.

மொசூலுக்கு செல்லக்கூடிய வழியில் இருக்கும் பஷ்மானா என்ற கிராமத்தில் ராணுவம் நுழைந்த போது, அந்த கிராமம் காலியாக இருந்ததாகவும், அங்கு வசித்தவர்கள் ஐ.எஸ் பிடியில் பணயக்கைதிகளாக இருக்கலாம் என்று தோன்றுவதாகவும் இராக் ராணுவ தளபதி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்