அமெரிக்க சார்பு குறைக்கப்படும்: பிலிப்பைன்ஸிடம் தெளிவுகளை கேட்கும் அமெரிக்கா

பிலிப்பைன்ஸ் அமெரிக்காவை சார்ந்து இருப்பதை குறைத்து கொள்ளும் என்றுஅந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ அறிவித்த பிறகு, அது தொடர்பாக பிலிப்பைன்ஸிடம் தெளிவுகளைப்பெற போவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்க சார்பைக் குறைப்போம் -பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ

சீனாவில் பயணம் மேற்கொண்டபோது, ராணுவ, பொருளாதார மற்றும் சாத்தியமாகும் சமூக விடயங்களில் பிலிப்பைன்ஸ் அமெரிக்காவை சார்ந்து இருப்பதை பிலிப்பைன்ஸ் குறைத்துவிடும் என டுடெர்டோ முறையாக அறிவித்தார்.

இருப்பினும், அமெரிக்காவோடு பாரம்பரியமாக இருக்கும் வலுவான தொடர்புகளை பிலிப்பைன்ஸ் துண்டிக்காது என்று வெளி விவகார மற்றும் வர்த்தக அமைச்சர்கள் உள்பட டுடெர்டொ அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்