தென் கொரிய சரக்கு கப்பலில் இருந்து இருவர் கடத்தல் - பிலிப்பைன்ஸ் ராணுவம் தகவல்

அபு செய்யாஃப் தீவிரவாதிகள் என சந்தேகப்படுவோர் தென் கொரிய சரக்கு கப்பலில் இருந்து இரண்டு பேரை கடத்தியிருப்பதாக பிலிப்பைன்ஸ் ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Abu Sayyaf
Image caption தனியானதொரு இஸ்லாமிய அரசை உருவாக்குவதற்காக தேவைப்படும் நிதி திரட்ட ஆட்களை பணய கைதிகளாக வைத்து பெறுகின்ற நிதியை அபு செய்யாஃப் பயன்படுத்தி வருகிறது

ஆஸ்திரேலியாவுக்கு செல்கின்ற பாதையில் பிலிப்பைன்ஸூக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த இந்த சரக்கு கப்பலில், வடத்தை பயன்படுத்தி பத்து துப்பாக்கிதாரிகள் ஏறியிருப்பதாக, நாட்டின் மேற்கிலுள்ள மின்டனாவோ பிராந்தியத்தின் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

பிறரை விட்டுவிட்டு, தென் கொரிய தலைமை மாலுமியையும், அந்த கப்பல் ஊழியர் அணியில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவரையும் அவர்கள் கடத்தி சென்றுள்ளனர்.

ஆள்களை கடத்துவதையும், பணத்திற்காக பணயக் கைதிகளை வைத்து மிரட்டுவதையும், அபு செய்யாஃப் இஸ்லாமியவாத தீவிரவாதிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்