லிபிய சர்வதேச கடற்பரப்பில் குடியேறிகள் படகு மீது தாக்குதல், 4 பேர் பலி

150 பேர் பயணம் செய்த குடியேறிகளின் படகு ஒன்று, லிபியாவின் கடற்பரப்பிற்கு வெளியே, சர்வதேச கடற்பரப்பில் வைத்து தாக்குதலுள்ளானது என்று ஜெர்மனி மீட்புதவி குழு ஒன்று தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AP
Image caption மக்களை கடத்துவோர் குடியேறிகளை சிறிய படகுகளில் ஏற்றி கடலில் அனுப்பிவிடுகின்றனர்

லிபியாவின் கடலோரப் பாதுகாப்புப் படையை சேர்ந்தது என்று எழுதப்பட்டிருந்த ஒரு விரைவு படகில் இருந்தோரால் தாக்கப்பட்டபோது, இந்த சிறு படகில் இருந்தோருக்கு "சீ வாட்ச்" என்ற இந்த மீட்புதவி குழு உயர் காக்கும் அணிகளையும், மருத்துவ உதவியையும் வழங்கியுள்ளது.

அந்த தாக்குதல்தாரிகள் குடியேறிகளை தடியால் அடித்ததால், குடியேறிகள் நீரில் குதிக்க வேண்டியதாயிற்று.

பெரும்பான்மையினர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆனால், நான்கு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 25 பேரை இன்னும் காணவில்லை.

இந்த தாக்குதலுக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், அந்த சிறு படகின் இயந்திரத்தை திருட தாக்குதல்தாரிகள் முயன்றதாக சீ வாட்ச் மீட்புதவி குழுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்