ஒன்றுக்கு மேற்பட்ட மனஆளுமை உடையவரை தூக்கிலிடும் வகையில் பாகிஸ்தானில் தீர்ப்பு

ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட மனஆளுமை உடையவராக செயல்படுகின்ற ஸ்கிசோஃப்ரனியா என்பது, மனநோய் அல்ல என்று பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, மரண தண்டனை பெற்றிருக்கும் சித்தப்பிரமை ஸ்கிசோஃப்ரனியா உடைய ஒருவருக்கு மரண தண்டனை வழங்க வழிகோலியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை AP
Image caption கணவருக்கு இரக்கம் காட்ட வேண்டுமென சஃபியா பானோ வேண்டுகோள் விடுத்துள்ளார்

14 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மத குருவை கொலை செய்த பிறகு, நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில், இம்தாத் அலி பைத்தியம் என்று மருத்துவ அறிக்கை தெரிவித்தது.

இம்தாத் அலி, அவருடைய குற்றத்தையோ அல்லது தண்டனையையோ புரிந்து கொள்ள இயலாத நிலையில் இருப்பதால், மரண தண்டனை வழங்குவதற்கான உடல்நிலையில் இல்லை என்று அவருடைய வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால், ஸ்கிசோஃபரனியாவை நிரந்தர மன சீர்குலைவு என்று வரையறுக்க முடியாது என்றும், மீண்டும் நலம்பெறும் நிலை என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

இம்தாத் அலியை துக்கிலிடுவது சர்வதேச சட்டத்தை மீறுகின்ற செயலாக அமையும் என்று ஐநா எச்சரித்திருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்