ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்த முயற்சிகள் தோல்வி - கனடா

  • 21 அக்டோபர் 2016

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக கனடா தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்த ஒப்பந்தத்தில் இனி மேலும் கையெழுத்திடப்படும் என்று ஐரோப்பிய நாடுகள் நம்புகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இணையான கோட்பாடுகளைக் கொண்ட கனடாவோடு இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இல்லை என்பது தெளிவாகி இருப்பதாக கனடா வர்த்தக அமைச்சர் கிறைஸ்டினியா ஃபிரிலன்ட் தெரிவித்திருக்கிறார்,

ஐரோப்பிய ஒன்றியம் இந்த ஒப்பந்தத்திற்கான வழிமுறைகள் இன்னும் முடிவடையவில்லை என்று தெரிவித்துள்ளது..

ஐரோப்பிய ஒன்றியம் அதனுடைய அனைத்து 28 உறுப்பு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை ஏற்பதற்கு எடுத்த சமீபத்திய முயற்சியை பெல்ஜியத்தின் பிராந்தியமான வாலோனிய அரசு தடுத்துவிட்டது.

வட அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களால் சிறிய வர்த்தகங்கள் அழிக்கப்படும் என்று வாலோனிய அரசு அஞ்சுகிறது.

பெல்ஜியத்தின் அனைத்து மூன்று பிராந்தியங்களும் தீர்மானங்களை ஏற்றுகொண்டால்தான் அவை செல்லுபடியாகும் என்று அந்நாட்டின் மத்திய அரசியல் சாசனம் குறிப்பிடுகிறது.