கசாப்புக் கடையாக அலெப்போ மாறிவிட்டது: ஐ.நா மனித உரிமைகள் ஆணையர்

  • 21 அக்டோபர் 2016

சிரியாவில் உள்ள அலெப்போ நகரில் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து காயம் அடைந்து பொதுமக்களை அப்புறப்படுத்தும் திட்டங்களை இன்று மட்டும் கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஐக்கிய நாடுகள் தள்ளப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

பல குழுக்களின் உடன்பாடு இன்னும் தேவைப்படுகிறது என்று மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தை சேர்ந்த ஐ.நா அதிகாரியான டேவிட் ஸ்வான்சன் தெரிவித்துள்ளார்.

இது ஒரு கடினமான தருணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அலெப்போ மீது ரஷ்யா மற்றும் சிரியா விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதல் நடத்துவதில் தற்காலிக நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை மீட்புப் பணிக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளலாம் என ஐ.நா நம்பியிருந்தது.

ஒரு கசாப்புக் கடையாக, அலெப்போ மாறிவிட்டதாக ஜெனீவாவில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் செயீத் ராத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் குறிப்பிடக்கூடிய குற்ற சம்பவங்கள் சிரியாவில் இழைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்