மலேசியாவில் பலூன்கள் வெடித்ததில் டஜன் கணக்கானோர் காயம்

மலேசியாவில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில், வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வெடித்து சிதறியதில் பல குழந்தைகள் உட்பட டஜன்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

மலேசியாவில் உள்ள டெரெங்கனு மாநிலத்தில் உள்ள பூங்கா ஒன்றில், ஹைட்ரோஜன் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் காற்றில் பறக்க விடப்படுவதற்குமுன் அதனை காண கூட்டம் கூடியிருந்தது.

அதை பறக்கவிடும் முயற்சியில், நிலத்தோடு கட்டப்பட்டிருந்த பலூன்களின் சரங்களை அதிகாரி ஒருவர் சிகரேட் லைட்டர் மூலம் தீ வைக்க, அது மிகப்பெரிய தீ பிழம்பாக வெடித்தது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வர்ணித்துள்ளனர்.

பார்வையாளார்களின் பலரது முகங்களில் கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்