சீனா சொந்தம் கொண்டாடும் தீவுக்கு அருகில் அமெரிக்க போர் கப்பல்: எச்சரித்தது சீனப்படை

தென் சீன கடற்பரப்பில், சீனா சொந்தம் கொண்டாடுகின்ற பாராசெல் தீவுகள் சிலவற்றின் மிக அருகில், அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று பயணித்திருப்பது, அந்த பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற வேண்டுமென சீனப் போர் கப்பல்கள் எச்சரிக்கை விடுக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption யாருக்கு சொந்தம்?

அமெரிக்காவின் யுஎஸ்எஸ் டிகாடிர் என்ற டெஸ்ட்ராயர் ரக கப்பல் வெள்ளிக்கிழமை இவ்வாறு பயணம் செய்திருப்பது சட்டப்பூர்வமற்றது, ஆத்திரமூட்டுகின்ற செயல் என்று சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இருப்பினும், சீனாவால் சொந்தம் கொண்டாடப்படுகின்ற 12 கடல் மைல் எல்லை மண்டலத்திற்குள்ளே அமெரிக்கப் போர் கப்பல் நுழையவில்லை என்று இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளும் கூறியுள்ளனர்.

வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்பட பல ஆசிய நாடுகளால் சொந்தம் கொண்டாப்படுகின்ற நிலையிலும், தென் சீன கடலின் பெரும் கடற்பரப்பு தனக்கே சொந்தம் என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

தொடர்புடைய தலைப்புகள்